கிழக்கிற்கு விஜயம் செய்துள்ள இந்திய முக்கியஸ்தர்!



இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்றைய தினம் (01-11-2023) விஜயம் செய்துள்ளார்.


திருகோணமலை விமான தளத்தில் அமைச்சர் நிர்மலா சீதா ராமனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க, ஆளுநர் செயலாளர் L.P மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் L.L அணில் விஜயஶ்ரீ, அரச அதிபர் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின், ஏற்பாட்டில் நிர்மலா சீதா ராமன் இன்று (02-11-2023) திருக்கோணேச்சரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன் மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

புதியது பழையவை