மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் புதிதாக அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான வரவேற்பும் பதவி உயர்வு பெறும் அதிபர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும்
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றது.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து அதிபர் சேவை பரிட்சைக்கு தோற்றியவர்களில் 21 பேர் புதிதாக அதிபர் சேவை தரம் மூன்றுக்கு பதவி உயர்வு பெற்ற அதிபர்களுக்கான கடமைகள், பொறுப்புகள் தொடர்பான கருத்துக்கள் ஆலோசணைகள் ஆகியனவும் துறைசார்ந்தவர்களால் வழங்கப்பட்டன.
பட்டிருப்பு கல்வி வலய அதிபர் சேவை சங்கத்தின் அனுசரனையில், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், எனப் பலர் கலந்து கொண்டனர்.