வங்கக் கடலில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வுவங்கக் கடல் பகுதியில் இன்று (07 -11-2023) அதிகாலை 5.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இது ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது. 

அந்தமான், நிகோபார்  தீவுகளில் 
அந்தமான் மற்றும் நிகோபார்  தீவுகளை அண்மித்த பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை நேபாளத்தில் கடந்த 03ஆம் திகதி இடம்பெற்ற நிலநடுக்கத்தால் 150 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை