திருக்கோவில் பிரதேசத்தில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை!அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் சில வருட காலமாக திருமணம் ஆன கணவனும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இன்று (21-11-2023) செவாய்கிழமை பதிவாகியுள்ளது. 

திருக்கோவில் 4 பகுதில் மரணமாகிய 28 வயதுடைய மனோககரன் தேவதர்சன் மற்றும் 23 வயதுடைய ரவிந்திரகுமார் நிலுயா இருவரும் மூன்றுவருட காலமாக திருமணமாகி இரண்டு வயதுடைய பெண்குழந்தை இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமையை தொடர்ந்து
இருவர் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை