மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு!



மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரபுரம் பிரதேசத்தில் தொடருந்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (23.11.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு- குமாரபுரம் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த நபர் மது போதையில் தொடருந்து பாதையில் சென்று கொண்டிருந்தமையே விபத்திற்கான காரணமென பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை