மாவீரர் தினத்தை குழப்பும் நோக்கில் விஷமிகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்





தமிழர் தாயகத்திற்காக வீர மரணத்தை தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று பல பகுதிகளில் இடம்பெறவுள்ளன.

இந்தநிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் தின நிகழ்வுகளை குழப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


குறித்த சுவரொட்டியில், பல தடைகள் வருகின்ற காரணத்தினால் திட்டமிட்டபடி மாவீரர் நினைவு தின நினைவஞ்சலிகள் இடம்பெறாது என்றும் அவரவர் வீட்டில் இருந்து அஞ்சலி செலுத்துமாறு குறித்த குறிப்பிடப்பட்டுள்ளது.


சதி நடவடிக்கை



மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகளை முன்னிட்டு பலருக்கு காவல்துறையினரால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு சுவரொட்டிகள் மூலம் அஞ்சலி நிகழ்வினை குழப்பும் செயற்பாட்டில் சிலர் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புதியது பழையவை