மாவீரர்களை நினைவேந்த திருகோணமலையில் தடை - M.A.சுமந்திரன் எடுத்துள்ள நடவடிக்கைசம்பூர் - ஆலங்குளம் பகுதியில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்குமாறு கோரி மூதூர் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி டி.ரமணனால் இந்த நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் இது தொடர்பில் வாதம் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் மூதூர் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

தடை உத்தரவு


திருகோணமலை - ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களை நினைவு கூறுவதற்கு 17 பேருக்கு மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.


சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக கடந்த (23-11-2023)ஆம் திகதி மூதூர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அறிக்கையை பார்வையிட்ட மூதூர் நீதிமன்ற நீதவான் எச்.எம்.தஸ்னீம் பௌஷான், பொலிஸாரினால் பெயர் குறிப்பிடப்பட்ட 17 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை