மட்டக்களப்பில் இடம்பெற்ற "மலையகம் 200" நிகழ்வு!சந்திரோதயம் கலை இலக்கிய பெரு மன்றத்தினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் "மலையகம் 200" எனும் மலையக மக்களின் பெருமையை பறைசாற்றும் நிகழ்வு இன்று (17-12-2023) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

சந்திரோதயம் கலை இலக்கிய பெரு மன்றத்தின் தலைவர் எஸ்.மணிசேகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக
கலாநிதி உ.யுவநாதன் தலைமையில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தின் பேராசிரியர் செ.யோகராசா அரங்கில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதான உரையாளராக முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் கலை இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளருமான ம.திலகராஜ் கலந்துகொண்டிருந்ததுடன், குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள், மலையக மக்கள் சார்ந்த பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் மௌன இறைவணக்கம் நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் கலை இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளருமான ம.திலகராஜ் அவர்களது பிரதான உரை நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந் து, அரசியல் பிரதிநிதிகளின் சிறப்பு உரைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை