கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட - குடும்பஸ்தர் உயிரிழப்பு!யாழ்ப்பாணத்தில் கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த 48 வயதுடைய மாரிமுத்து சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில், சுகவீனம் அடைந்துள்ளார்.

அதனையடுத்து அவரை வீட்டார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை