புத்தாண்டு 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது.
வரவிஇருக்கும் 2024 ஆம் ஆண்டு குருவால் ஆளப்படும், இது ஒரு சுப கிரகமாகும், இது உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக நோக்கி முன்னேற உதவும்.
அதே மேலும் சனி கும்ப ராசியிலேயே பயணிப்பார், இது தவிர சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் பல சுப, அசுப யோகங்களை உருவாக்கும். மறுபுறம் 2024 ஆம் புத்தாண்டு 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள ஆவலுடன் இருப்பார்கள்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு 2024 ஆம் ஆண்டில் திருமண வாழ்க்கை கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றாக சேர வாய்ப்புக்கள் அதிகம்.
ரிஷபம்
இந்த வருடத்தின் அதிர்ஷ்ட ராசிகளில் ரிஷப ராசியும் ஒன்று. குறிப்பாக மே இறுதி வரை இந்த ஆண்டு உங்களுக்கு செழிப்பு மற்றும் ஆடம்பரங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும். உங்கள் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை வெல்ல தயாராக இருங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்கு நல்ல வாய்ப்புகளை தரக்கூடிய நல்ல ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது. திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தலைவலி உள்ளிட்ட ஒரு வாரகால உடல் பிரச்சினை வந்து போக வாய்ப்பு உள்ளது.
கடகம்
2024 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் கடக ராசியினருக்கு ஏப்ரல் வரை பெரிய வெற்றிகள் தொழிலில், வருமானத்தில் வந்து சேராது. தொடர்ந்து போராடி முயன்றால் வெற்றி சாத்தியம் ஆகும். புதிய சொத்துக்களை வாங்கலாம். ஆனால் மிக மிக கவனமாக இருப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது. பண விசயத்தில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. நல்ல வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
2024 ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிரச்னைகள் இல்லாமல் ஓரளவுக்கு அமைதியான வாழ்க்கை ஆரம்பமாகும். மிகப்பெரிய யோகத்தை தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.ராகு, கேதுவால் அவ்வப்போது சின்ன ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். எனவே உடல் நலத்தில் அக்கறை தேவை.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு தொட்டதெல்லாம் பொன்னாகும். குலதெய்வத்தின் கருணை முழுவதுமாக உங்களுக்கு கிடைக்கப்போகிறது. பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். நிறைய சுப விரைய செலவுகள் நடைபெறப்போகிறது. வாழ்க்கைத் துணைக்காக செய்த மருத்துவ செலவுகள் இனி முடிவுக்கு வரப்போகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் 2024-ம் ஆண்டில் தங்கள் தொழிலை கணிசமாக விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறலாம். ஒன்றன் பின் ஒன்றாக பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் பெரிய சாதனைகளை அடையலாம். உறவுகள் மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு
உங்கள் மீது பண மழை பொழியும். உங்கள் புத்திசாலித்தனம் இந்த ஆண்டு இன்றியமையாதது. புத்திசாலித்தனத்தை சரியாகப் பயன்படுத்துவது உலகில் உள்ள அனைத்து நல்லிணக்கத்தையும் கொண்டு வரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு யோக ஆண்டாக அமைந்திருக்கிறது. குருவானவன், வீடு கார் உள்ளிட்டவற்றை வழங்க இருக்கிறார். சனி பணத்தை கொட்டோ கொட்டு என்று கொட்ட போகிறார்.
கும்பம்
பிப்ரவரி 14, 2024 உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியத்துவத்தைக் குறிக்கும். சமூகத்தில் உங்கள் தாக்கம் அதிகமாக இருக்கும். செவ்வாய் உங்கள் வாழ்க்கையை மிகவும் பிஸியாக மாற்றப் போகிறது. புதன் உங்கள் காதல் வாழ்க்கையை கொஞ்சம் கொந்தளிப்பாக மாற்ற முயற்சிக்கும்.
மீனம்
2024 உங்களுக்கு ஒரு நல்ல காதல் வாழ்க்கையை உறுதி செய்யும். உங்கள் உறவுகள் அனைத்தும் சீரமைக்கப்படும். நிதி பிரச்சனை ஏற்படலாம். வருடத்தின் இறுதியில், வெற்றியாளராக வெளிப்படுவீர்கள்.