மட்டக்களப்பில் வெள்ளத்தால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவினார் - பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் எம்.பிமட்டக்களப்பு மாவட்டத்தின், கிண்ணயடி - பிரம்படித்தீவு மற்றும் முருங்கன்தீவு கிராமங்களுக்கான போக்குவரத்து அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இயந்திரபடகுச் சேவை தற்காலிகமாக இடம்பெற்று வரும் நிலையில் போக்குவரத்திற்காக மக்களிடம் எரிபொருளுக்காக கட்டணம் அறவிடப்படுகின்றது.

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் பல கஷ்டத்தை அனுபவித்துவரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரின் சொந்த நிதியில் இன்று (31-12-2023)ஆம் திகதி சில தினங்களுக்கு போக்குவரத்திற்கு தேவையான எரிபொருள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை முன்னால் உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்க இளைஞர் அணி உப தலைவருமான இ.வேணுராஜ் அவர்களும் சென்று வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.புதியது பழையவை