மட்டக்களப்பில் விழிப்புணர்வுக் கண்காட்சி



வடக்கு கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சிக் கோரிக்கையின் தோற்றம் எனும் கருப்பொருளில் மட்டக்களப்பில் விழிப்புணர்வுக் கண்காட்சி
நேற்று இடம்பெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கிழக்கு மாகாண அங்கத்துவ அமைப்புக்கள்
இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

தன்னாமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழர்களுக்கான சமஸ்டி அதிகாரத்தை வலியுறுத்தும் வகையிலான
ஊர்வலம் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்படும் வரலாறுகள் தொடர்பான ஆவண தொகுப்பும் வெளியிடப்பட்டது.

ஐக்கிய இலங்கைகக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு எனும் தலைப்பில் மக்கள்
பிரகடனமும் வெளியிடப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
கோவிந்தன் கருணாகரம் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை