கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்துரையாடல்


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் இன்று(14-12-2023)  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

சிறுபான்மையினக் கட்சி ஒன்றின் தலைவரான தாங்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், கிழக்கு மக்களும் இதனை பெரிதும் ஆதரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம், காணி அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் முஷாரப் எம்.பி இங்கு தெரிவித்தார்.

மிகவும் இக்கட்டான கட்டத்திருந்து நாட்டை மீட்டு வரும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்துச் செல்ல ஆளுநரின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் வேண்டிக்கொண்டார்.

அத்தோடு கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் நீண்டகாலமாக தற்காலிக, பதிலீட்டு அடிப்படையில் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கு மாறும் கோரிக்கை முன்வைத்தார்.

கிழக்கு மாகாணத்தின் அபிவித்திக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற விரும்புகின்றேன். அதற்காக முழுமையாக எனது பணிகளை ஆரம்பித்து செயற்படுகின்றேன். உங்களது ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும் உள்ளுராட்சி மன்றங்களில் நீண்டகாலமாக தற்காலிக, பதிலீட்டு அடிப்படையில் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க நானும் விரும்புகின்றேன். மத்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும்போது அதனை விரைவாகச் செய்வேன். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கான அனுமதி கிடைப்பதற்கு ஒத்துழைக்கு மாறும் கேட்டுக் கொண்டார்.

ஆளுநர் செந்தில் தொண்டமானுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாகவும், மக்களுக்கான பணியில் மிக வேகமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் முஷாரப் எம்.பி தெரிவித்தார்.

ஆளுநருடனான சந்திப்பில் பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான அன்வர் சதாத், எம்.எஸ். முபாரக் பாராளுமன்ற உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எஸ்.எம்.அறூஸ், ஊடகவியலாளர் பைசல் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை