பதினெட்டு வருடங்களுக்குமுன் பாலன் பிறப்பு தினமான நத்தார் நன்நாளில் 2005, டிசம்பர்,25,ல் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது என்னை அந்த கொலையாளிகள் சுட்டுகொன்றனர்…
என்னை சுட்டவர்கள் அதற்கு பின்னணியில் இருந்தவர்கள் எல்லோரும் இன்று பதவிகளும், சலுகைகளும் பெற்று ஆடம்பரமாக வாழ்கின்றனர்….
18, வருடங்கள் கடந்தும் அவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை…
நான் தமிழ்த்தேசிய கொள்கையுடன் உறுதியாக சோரம்போகாமல் தந்தை செல்வாவால் ஆரம்பித்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி, தமிழர் விடுதலைகூட்டணி, பின்னர் தமிழ்தேசியக்கூட்டமைப்பு எல்லா அரசியல் கட்சிகளுடனும் கொள்கை மாறாமல் அந்தந்தக்காலக்கட்டங்களில் எனது அரசியல் பணியை அற்பணிப்புடன் உறுதியுடனும் உண்மையைடனும் பயனித்தமையால் எதிரியால் சுடப்படவில்லை தமினின துரோகிகளால் சுடப்பட்டேன்..
இன்று 2023,டிசம்பர்,25, ல் 18, வருடங்கள் கடந்தும் என்னை கொலைசெய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை, என்ற கவலை எனக்குள் இருந்தாலும் இறைவனால் அந்த கொலையாளிகள் தண்டிக்கப்படுவார்கள் அந்த துரோகிகளின் கொலைஞர்களின் ஆவியும் என்னுடன் வந்து சேரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு….
நான் இப்போது கூறவந்த விடயம் அதுவல்ல என்னைப் போல் தமிழ்த்தேசியக் கொள்கையில் உறுதியாக ஈழமண்ணில் போராடியவர்கள், செயலாற்றியவ்ர்கள், மாவீரர்கள், உதவி செய்தவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் என்னைப்போன்று ஆவிகளாக மேல்லோகத்தில் இருந்து ஈழமண்ணை பார்துக்கொண்டு எப்போ விடியும் என்ற ஏக்கத்துடன் உள்ளோம்.
ஒருநாள் விடிவு வரும் சுதந்திரம் அங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் என்னைப்போன்று தமிழினப்பற்றுள்ளவர்களின் ஆவிகள் எதிர்பார்து ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்.
ஆனால் ஈழத்தில் இப்போது பல பெயர்களில் தமிழ்த்தேசிய கட்சிகள் முளைத்துள்ளன, பலபேர் தலைவர்கள் என கூறுகின்றனர் ஒரு முடிவை ஒருமித்து ஒற்றுமையாக எடுக்கமுடியாம் தமிழர்கள் திண்டாடுவதை பார்த்து கவலையாய் உள்ளது…
பல கட்சிகள் இருப்பதை நான் குறை கூறவில்லை எல்லாக்கட்சிகளும் இணைந்து ஒருமித்து தமிழினத்திற்கான தீர்வு இதுதான் என ஒரு குரலில் வலியுறுத்துவதற்காகவேனும் இணக்கப்பாட்டை காணுங்கள் என்றுதான் கூறுகிறேன்…
புலம்பெயர் நாடுகளில் வாழும் நம்மவர்கள் ஒரு காலம் உறுதியாக செயல்பட்டனர் ஆனால் இன்று சில தமிழர் புலம்பெயர் அமைப்புகள் சோரம்போய் அடிப்படை கொள்கை, கோட்பாடு, எதற்காக போராடினோம் என்பதை எல்லாம் மறந்து சுயநிர்ணய உரிமையை கைவிட்டு இன அழிப்பு சம்மந்தமாக சர்வதேச விசாரணை நடத்படுவதற்கான எடுக்கும் முயற்சிகள் கைவிடவேண்டும்.
அதனை நிறுத்தி ஆட்சியாளர்களுக்கு துணைபோதல், தமிழர் தனித்தேசிய இனம் என்பதை மறுதலித்து இலங்கையர் என்ற அடையாளத்துடன் வாழுதல், எதிர்காலத்தில் போரினால் பலியான மாவீர் நாளான கார்திகை 27, முள்ளிவாய்க்கால் நினைவுநாள் மே,18, அதுபோன்ற நினைவுகளை செய்யாது பொதுவான ஒருநாளில் நினைவுகளை கடைப்பிடித்தல், இவ்வாறு பல துரோகங்களை கையாள்வதற்காக சில புலம் பெயர் அமைப்புகள் இலங்கையில் பௌத்த பீடத்துடனும், ஆட்சியாளர்களுடனும் கைகோர்துள்தாக அறிந்து வெட்கித்தலை குனிகிறேன்….
இந்த சதி பின்னலில் சில தமிழ்தேசிய கட்சிகளில் உள்ள ஒரு சிலரும் ஆதரவாக உள்ளனர் என அறிந்து எனது ஆவி துடியாய் துடிக்கிறது..
எதிர்காலத்தில் தமிழ்ந்தேசிய கட்சிகளின் சுயநிர்ணய உரிமை பிரச்சனையை இல்லாமல் செய்து அபிவிருத்தி அரசியலுக்குள் இளைஞர்களை முடக்கும் வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படுவதையிட்டு நினைத்து மனதுக்குள் அழுகிறேன்..
அன்பான உறவுகளே….. என்னையும், என்னைப்போன்ற உறுதியான பற்றுள்ள தமிழர்களை படுகொலைசெய்தவர்களின் நோக்கம் ஈழத்தில் தமிழ்த்தேசியம் வளர்ச்சிபெறாமல் சிதைக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும்,புலி நீக்கம் செய்தது போல் தமிழ்த்தேசிய நீக்கம் இடம்பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் அதற்காக பலகோடிப்பணங்களை செலவு செய்து இலங்கையிலும், உலக நாடுகளிலும் பலர் கருமங்களில் ஈடுபடுகின்றனர் அதற்கு நீங்கள் எவரும் உண்மையான தமிழ் தேசிய கட்சிகளில் உள்ள எவரும் துணை போகும்படி நடந்து கொள்ளவேண்டாம்..
என்னை கொலை செய்தாலும் என்னால் கடைப்பிடித்த தமிழ்தேசியக்கொள்கை நான் இணைந்து பணியாற்றிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் உறுதியானவர்கள் தொடர்ந்தும் செயல்பட வேண்டும் என்பதே எனது ஆசை அதற்காக உழைக்கவேண்டும் என கேட்கிறேன்….
இதுவே எனது 18,ம் ஆண்டு நினைவு நாளில் நான் உங்களுக்கு கூறும் உபதேசம் அப்போதுதான் எனது ஆத்மா சாந்திபெறும்.!
இங்ஙனம்
மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களின் ஆவி.
ஆக்கம்:பா.அரியநேத்திரன்-
25/12/2023.