முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்கள் பாம்பு கொத்திற்கு இலக்காகியுள்ள நிலையில் தப்பி சென்றுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் பல புதுமைகளை பக்த்தர்களுக்கு காட்டி வருகின்றார் பல ஆயிரக்கணக்கான பக்கத்தர்களின் நம்பிக்கைக்குரிய வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்பு தரப்பினரும் நம்பிக்கை வைத்து பல வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் கடந்த( 22-12-2023) அன்று வெள்ளிக்கிழமை இரவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைக்கும் நோக்குடன் மூன்று பேர் கதவினை உடைத்து திருடுவதற்காக முயன்றுள்ளார்கள்.
திருட முற்பட்டவர்கள் கூரிய ஆயுதங்களுடன் ஆலயத்திற்குள் நுளைந்துவர்கள் சி.சி.ரி கமரவின் இணைப்பினை துண்டித்துவிட்டு கொள்ளையிட முற்பட்டுள்ளார்கள் இதன்போது சி.சி.ரிவி கமார பொக்சின் மூடியினை திறந்து அதனை கட்பண்ண முயற்சித்த வேலை அதற்குள் இருந்து பாம்பு ஒன்று கொத்தியுள்ளது.
இந்த சம்பவத்தினை அடுத்து பாம்பு கடிக்கு இலக்கானவரை கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் சி.சி.ரிவி கமராவில் காட்சிகள் பாதிவாகியுள்ளதுடன் இதுதொடர்பில் ஆலய நிர்வாகத்தினால் (24-12-2023 )இன்று முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.