அடுத்த ஆண்டின் (2024) ஆரம்பத்தில் 30,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மூலம் அந்த பணியிடங்கள் நிரப்பப்படவிருப்பதனால் இந்த பணிநீக்கம் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பர விநியோகப் பிரிவில்
மேலும், கூகுள் நிறுவனத்தின் விளம்பர விநியோகப் பிரிவில் இருந்தே 30,000 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுளின் அமெரிக்கா மற்றும் உலக பங்காளர்களின் தலைவரான சான் டௌனி, விளம்பர விநியோகப் பிரிவில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார் அதன் ஒரு கட்டமாக இந்த பணிநீக்கம் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தவிரவும் இந்த 30,000 பணியாளர்களின் வேலையை கூகுளினால் உருவாக்கப்பட்ட சில செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மூலம் எளிதாக செய்துமுடிக்க முடியும் எனவும் அவர் கூறியிருந்தார்.
அதிக எண்ணிக்கையான பணியாளர்கள்
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 12,000 பணியாளர்களை கூகுள் நீக்கியிருந்தது, கூகுள் வரலாற்றில் அதிக எண்ணிக்கையான பணியாளர்கள் நீக்கப்பட்ட முடிவாக அது கருதப்பட்டது.
அதுகுறித்து பேசிய கூகுளின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை 'அது கடினமான முடிவுதான், ஆனால் அது கட்டாயமாக எடுக்கபட வேண்டிய முடிவும் கூட' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் ஆண்டு இதை விட அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் முடிவினை கூகுள் நிறுவனம் எடுத்திருக்கின்றது மிகப்பெரிய முடிவு என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.