விஜயகாந்திற்கு மட்டக்களப்பில் அஞ்சலிஇந்தியாவில் உயிரிழந்த முன்னாள் நடிகர் மற்றும் தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த்க்கு மட்டக்களப்பு மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

காந்தி பூங்காவில் இன்று (29-12-2023) மாலை ஒன்று திரண்ட மக்கள் மலர் தூபி தங்களது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.


உலகம் முழுவதும் அஞ்சலி
கோவிட் தொற்று ஏற்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.


இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவரது இழப்புக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை