மட்டக்களப்பு பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ள நீர் வேகமாக ஓடுகின்றது!தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மண்முனை தென் எருவில் பிரதேச செயலகம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசெயலகப் பகுதியில் உள்ள வீதிகள் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில். வெள்ளம் வடிந்தோடுவதற்கு, வசதியாக பெரியகல்லாறு முகத்துவாரம் இன்று(30-12-2023)வெட்டப்பட்டு ஆறு, ஓடை மூலம் சேரும் வெள்ள நீர் சமுத்திரத்தை சென்றடைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

ஆற்றினூடாக வெளியில் இருந்து வரும் வெள்ள நீர் முதலில் உள்வாங்கப்படுதால், ஊர் வெள்ளங்கள் முழுமையாக வடிவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் எடுக்குமென அனுபவஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.


புதியது பழையவை