மட்டகளப்பு நாவலடி முகத்துவாரப் பகுதியில் நேற்று(06.12.2023) வழமைக்கு மாறாக மட்டக்களப்பு கடற்தொழிலாளர்களால் அதிகளவு மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலநிலை மாற்றம்
மேலும், காலநிலை மாற்றத்தினால் அதிக மழை மற்றும் காற்று நிலவும் இக்காலப்பகுதியில் இவ்வாறாக அதிகளவு மீன்கள் கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிடிக்கப்பட்ட மீன்கள் மக்கள் மத்தியில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.