இரட்டைக் குழந்தைகளை விற்ற இளம் தாய் கைது!பிலியந்தலை பகுதியில் இரட்டைக் குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இளம் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவ்விரு சிசுக்களையும் விலைக்கு வாங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (07-12-2023) பிலியந்தலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபரான தாய் ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.


இவர் கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளதுடன் அந்த இரண்டு குழந்தைகளையும் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

அத்துடன் சந்தேகநபரிடம் இரட்டை சிசுக்களில் ஒன்றை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் மற்றைய சிசுவை விலைக்கு வாங்கிய பெண் களனி பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் தாய் மற்றும் இரண்டு சிசுக்களையும் வாங்கிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
புதியது பழையவை