சுனாமிப் பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி



சுனாமிப் பேரலை ஏற்பட்டு, இன்றோடு 19 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்த மக்களை
நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


சுனாமிப் பேரலையில் சிக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர்.


திருச்செந்தூர் சுனாமி நினைவாலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில்
வழிபாடுகள் இடம்பெற்று, சுடரேற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான
பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் ஆகியோரும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.

புதியது பழையவை