பாலியல் ரீதியிலான செயற்பாடுகளை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த இளம் தம்பதியினர் கைது!பாலியல் ரீதியிலான செயற்பாடுகளை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த இளம் தம்பதி ஒன்று ராகம பிரதேசத்தில் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்த கணவன், மனைவி தொடர்பில் ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 வயதுடைய இளம் பெண்ணும் அவரது 24 வயது கணவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராகம, தம்புவ பிரதேசத்தை வசிப்பிடமாகவும், மற்ற சந்தேகநபர் கொழும்பு IDH பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இராணுவத்தில் கடமையாற்றியவர்களில் ஒருவர் எனவும் தற்போது இராணுவத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் வீடியோ காட்சிகள் மூலம் இரு நாட்களுக்கு ஒரு தடவை 20 ஆயிரம், 30 ஆயிரம் என சாம்பாதித்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்கு முறையான வருமானம் இல்லாததால் ஒன்றரை வருடமாக தமது ஆபாச காட்சிகளைப் பதிவு செய்து நண்பர் ஒருவருக்கு வழங்கி பிரபல இணையத்தளம் ஒன்றில் பதிவேற்றியதாக கணவர் தெரிவித்துள்ளார்.

தான் விருப்பம் இல்லாவிட்டாலும் கணவரின் வேண்டுகோள் படி இதனை செய்ததாக கைதாகி உள்ள பெண் தெரிவித்து உள்ளார்.

இந்த தம்பதியினர் எங்கும் வேலை செய்யாமல் சொகுசு கார், 5 நட்சத்திர ஹோட்டல் சாப்பாடு, ஆடம்பர வாழ்க்கை சுகபோகமாக வாழ்வதால் சந்தேகமடைந்த குறிப்பிட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் , தம்பதி குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்படி இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்கியிருந்த வீட்டில் மடிக்கணினி, வீடியோ கமெரா மற்றும்
ஆபாச வீடியோ பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட சில சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை