கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு வாவியில் அதிநவீன கேரள படகுச் சேவையை
ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்யும் ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு வலுசேர்க்கும் வகையில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின்
முயற்சியினால் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் ஏந்திரி சிவலிங்கம் தலைமையில் சத்துருக்கொண்டான் வாவியில் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் ஏ.பி.மதனவாசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன்
இங்கு கேரள படகுச்சேவைக்கான முதலீட்டை செய்யவுள்ள இந்தியாவின் பிரபல தொழிலதிபர் பிரேம்குமாரும் கலந்துகொண்டார்.
சுமார் 21கோடி ரூபா செலவில் இரண்டு படகுகள் நவீன வசதிகளுடன் நூறு பேர் நிகழ்வினை நடாத்தும் வசதிகள் மற்றும் அறைகளுடன் இந்த படகு
அமைக்கப்படவுள்ளது.