நாளை அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம்!




நாளைய தினம் (12-12-2023) நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இதனை இன்று(11-12-2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.



அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி இந்த வேலைநிறுத்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை