இராணுவ சீருடை அங்கிகள் பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து மீட்பு!



இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன.


காணியொன்றை உரிமையாளர் துப்புரவு செய்து கிணற்றை இறைத்த போது, கிணற்றினுள்ளிருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.


இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்ததையடுத்து அதனை அப்புறப்படுத்துவதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இதனால் அவரது காணிக்குள் இராணுவ அங்கிகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன. இவை யுத்தத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், அணிந்து கொள்ளும் ஒருவகை கவச அங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை