வீதியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!




மஹியங்கனை - தெஹியத்தகண்டிய பிரதான வீதியிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வந்த கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


சடலத்திற்கு அருகிலிருந்த பணப்பை
சடலம் மீட்கப்பட்ட போது அழுகிய நிலையில் இருந்ததால், சடலத்தை யாராவது அவ்விடத்தில் வீசி விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் கருப்பு நிற பயணப்பையொன்றும் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை