அம்பாறை அக்கரைப்பற்றில் வீடொன்றில் 14 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நேற்று(27-01-2024)
14 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உட்சென்று, அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை திருடப்பட்டுள்ளது.

சம்பவ தினமான நேற்று(27) வைத்தியசாலையில் கடமை புரியும் கணவனும் மனைவியும் வழமைபோன்று, தனது இரு பிள்ளைகளையும் சகோதரியிடம் விட்டு விட்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் சகோதரி இரு பிள்ளைகளையும், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் வீட்டிற்கு சென்று பார்க்கையில்,
ஜன்னல் உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்ததுடன் அம்பாறையிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேட தடயவியல் பொலிஸார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
புதியது பழையவை