இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் திருகோணமலையில் நடைபெற்ற பொங்கல் விழா



இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள் ,1500 பரத நாட்டிய கலைஞர்கள் மற்றும் 500 கோலப் போட்டியாளர்களுடன் பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது .

குறித்த நிகழ்வானது இன்று (08-01-2024) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலையில் நடைபெற்று வருகின்றது.



பொங்கல் விழாவை வரவேற்கும் முகமாக நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்ற நிலையில் தொடர்ச்சியாக பல விளையாட்டுக்கள் இடம்பெற்று வருகின்றன.





மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக நடிகர் பிரசாத் , அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்த கொண்டமை குறிப்பிடத்தக்கது.




புதியது பழையவை