மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை தகாத செயலுக்கு உட்படுத்திய மூவர் கைது! 

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை உடல் ரீதியான அத்துமீறலுக்கு உட்படுத்திய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த மூவரும் நேற்று (07-01-2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சம்பவதினமான சனிக்கிழமை (06) பாதிப்புக்குள்ளான 15 வயதுசிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வரவழைத்து அங்கு அவரின் நண்பர்கள் இருவர் உட்பட 3 பேர் சிறுமியை உடல் ரீதியான அத்துமீறலுக்கு உட்படுத்தியுள்ளனர்.


இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய காத்தான்குடி குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கஜநாயக்கா தலைமையில் விசாரணைகள் மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று(07) சந்தேகநபர்களான 26,26, 32 வயதுடைய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை