சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 18வது நினைவேந்தல்




திருகோணமலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 18வது நினைவேந்தல் நிகழ்வு, நேற்று(24-01-2024)மட்டக்களப்பு காந்திபூங்காவில்
அமைக்கப்பட்டுள்ள, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பனவற்றின் ஏற்பாட்டில்,
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

சுகிர்தராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் வருகை தந்தோரால், மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்
தொடர்பில், ஊடகவியலாளர் சுகிர்தராஜன் உண்மைத் தன்மைகளை வெளிப்படுத்திய சில நாட்களின் பின்னர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு அருகே
வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
புதியது பழையவை