யாழ்.கரவெட்டியில் ஒழிந்திருக்கும் ஆயுள்வேத சித்த வைத்தியர் குமுதினிக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு!


யாழ்.கரவெட்டியில் ஒழிந்திருக்கும் ஆயுள்வேத சித்த வைத்தியர் குமுதினிக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மட்டக்களப்பு பேத்தாளை மத்திய ஆயுள்வேத மருந்தகத்தில் கடமையாற்றிய வந்த சித்த வைத்தியர் திருமதி சி.குமுதினி என்பவர் பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான மருத்துவ நூல்களை பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தினை வழங்காமல் யாழ். மாவட்ட நெல்லியடி பிரதேசத்தில் தலைமறைவாய் இருப்பதாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ கல்லூரியில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு மருத்துவம் தொடர்பான நூல்களை வழங்கப் போவதாகக் கூறி, பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான மருத்துவ நூல்களை கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டதாகவும், அதற்கான பணத்தினை இதுவரை வழங்காமல் ஏமாற்றி வந்ததாக்கூறியே அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை