மட்டக்களப்பு - தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் 400வது பெருவிழாஇலங்கையில் மிகவும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் 400வது பெருவிழா ஆரம்பமாகியுள்ளது.

காணிக்கை மாதா தேவாலயத்தின் பொருவிழாவானது நேற்றையதினம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது.

தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயம் 400வது ஆண்டை பூர்த்தி செய்யும் இலங்கையின் பழமையான ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படுகின்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜுலியன் பிரான்சிஸின் தலைமையில் விசேட ஜெபமாலை வழிபாடு நடைபெற்றதுடன் கொடிச்சீலையும் மாதாவின் திருவுருவமும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடியேற்ற இடத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


அதனை தொடர்ந்து ஆலயத்தின் பங்கு மக்களின் குழுத்தலைவர்களின் பங்களிப்புடன் பங்குத்தந்தையினால் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றதோடு தேவாலயத்தில் விசேட திருப்பலி பூஜையும் நடைபெற்றது.

இதன்படி எதிர்வரும் 03ஆம் திகதி மாலை சுற்றுப்பிரகாரம் நடைபெறவுள்ளதுடன் 04ஆம் திகதி காலை திருவிழா திருப்பலி நடைபெறவுள்ளது.


புதியது பழையவை