அண்ணா.....
கிழக்கின் தமிழ் தேசியத்தின் ஒருமைப்பாட்டின் வெளிப்பாடே உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. பிரதேச வாத மூலம் எங்களைப் பிரிக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு எம்மிடம் கருத்து முரண்பாடு உண்டு ஆனால் கருத்தியளில் முரண்பாடு இல்லை.
என்று உள்ளூரிலும் உலகிற்க்கும் எடுத்து சொன்னது உங்கள் வெற்றி.
"வாழ்த்துக்கள் அண்ணா"
விடையத்துக்கு வருவோம் மேதகு பிறக்கும் முன்பே. தமிழ் தேசியத்தை வலியுறுத்தி அதற்கான ஒரு கட்சி ஆரம்பித்தவர்கள் நாங்கள். கடந்த 75 வருட காலமாக. அதாவது தமிழரசுக்கட்சி உருவான காலம் தொட்டு இன்று வரை. நாம் வடக்குக் கிழக்குக்கிற்க்கு பொதுவான ஏதாவது ஒரு அபிவிருத்தி மற்றும் அரசியல் திட்டங்கள் மூலம் ஏதாவது ஓர் ஒருமைப்பாட்டை விதைத் உள்ளோமா.? கடைசி வடக்கு கிழக்கு மாகாண சபைகளை உறுப்பினர்களை ஓரு சந்திப்பை உருவாக்கி கொடுத்தோமா?
வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதை அமல்படுத்துவதற்கு ஒரு வீதமாவது ஆக்கபூர்வமாக செயல்திட்டம் செய்தோமா.?
தங்களின் அரசியலுக்காக உணர்ச்சியாக , உணர்ச்சிவசப்பட்டு கதைத்து கதைத்து 36 புரட்சி இயக்கங்களை உருவாக்கியது தான் மிச்சம்.. அதில் 15 வயது பாலகனும் அடங்கும்.
முள்ளிவாய்க்கால் விடுதலைப்புலிகள் மட்டும் அல்ல ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தை தூண்டிய இலங்கை தமிழரசுக்கட்சியும் சாட்சியாக உள்ளது.
இதுவரை நாங்கள் ஏதாவது கேள்வி கேட்டால். நடந்தவை பற்றி இப்போது கதைத்து என்ன பிரியோசனம் இனி நடப்பவை பார்ப்போம் என்பார்கள். நாம் சொல்வது நடந்ததிலிருந்து நடப்பவைக்கான ஒரு பாடமாக. அதை அமைக்க வேண்டும் என்பது தான்.
சிறிதரன் அண்ணா உங்கள் மேல் பூரண நம்பிக்கை எமக்கு உண்டு. நான் சொல்வது நடைமுறை யதார்த்தத்தை மட்டுமே அன்றி குறை கூறல் அல்ல..
கடந்த 75 வருஷமாக தமிழருக்கான தேசிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. இதற்கு ஒரு சொந்த கட்டிடம் உண்டா? ஏதாவது நிதி சேர்க்கை உண்டா? கதைத்து கதைத்து வயிறு வளர்ப்பவராக. வாழையடி வாழையாக வந்தது தான் இன்று வரை உள்ளது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லி சொல்லி
படுத்து கொண்டிருப்பதல்ல மாற்றம்.
மாற்றத்தை மாற்று வழியையும் விதைப்பது தான் மாற்றத்திற்க்கான ஒரே வழி
எமக்குப் பின் அரசியலுக்கு வந்தவர்கள் எம்மிடம் அரசியல் பயின்றவர்கள் எல்லாம். வானுயரந்த கட்டிடமும் வளங்களோடு ஓன்று சேர்ந்து இருக்கிறார்கள். எமது நிலை தேய்பிறை.
தேர்தலுக்கு எங்கிருந்து நீதி வருகிறது என்றது தாங்கள் அறிந்திருக்கிற வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கின்றேன்.
ஒரு கட்சி மகாநாடு போடுவதற்கு கூட எம்மிடம் நிதியிருக்கா? புலம் பெயர் அபிமானிகளை தானே நம்பியுள்ளோம்.. எங்கள் அரசியலை வளப்படுத்த முடியாத நாங்களா மக்களின் வாழ்க்கையையும் உரிமையையும் வளப்படுத்த போகிறோம் என்பது தவிர்க்க முடியாத உண்மையே.
விடுதலை புலிகளையும் அவர்களது கட்டமைப்பையும், வானுயர்ந்து பேசும் நாங்கள். அதில் ஒரு வீதம் கூட கடைப்பிடிக்கவில்லை என்பது நிதர்சனம். எங்களுக்கு முதலில் தேவை எங்களுக்கான ஒரு சொந்த கட்டிடம். சுய கௌரவத்தோட கூடிய ஒரு நிதி சேர்க்கை.
இன்று கனடாவில் மட்டும் தான் எமது கட்டமைப்பு உள்ளது. அங்கிருந்துதான் எமக்கு நிதி உதவிகள் கணிசமாக கிடைக்கின்றது..
சீமானின் நாம் தமிழர் கட்சி. உலகம் பூரா ஈழத் தமிழரை நம்பி அவர்களது கட்சிக் கிளைகளை திறந்துள்ளார்கள். ஈழத் தமிழரின் நிதியில் சீமானின் கட்சி வளர்பிறையாக சென்று கொண்டு இருக்கின்றது. எமது நிலமை. தேய்பிறையே காரணம் "சிந்திக்க தவறிய தருணமே".
நிதிநிலை மட்டுமல்ல. ஆக்கபூர்வமான அறிவுரை சொல்ல அறிவு சார்ந்தவர்கள் புலம்பெயர். பிரதேசங்களில். கணிசமான அளவு உள்ளனர். அவர்களது தொடர்பாடல்களுக்கான வழிமுறையோ வழிக்கான பொறிமுறை எம்மிடம் உண்டா ?
.ஈழ புலம்பெயர் சமூகத்தை ஐக்கியப்படுத்துவோயின் உங்களது பாதையின் வீச்சு பிரகாசமாக அமையும். அதற்குத் தேவை உங்களோடு தூர நோக்கோடு செயல்படுபவர்களை அரவணைத்து செல்வதே.. இது காலத்தின் தேவையும் ஆகும்.கட்சியில் ஒவ்வொரு பதவியும் ஒவ்வொரு மாவட்டத்திற்க்கு கொடுக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை கதைகளை முதலில். தூக்கி எறிவோம். இது திறமையானவரையும் வள்ளவர்களையும் அரவணைப்போம். என்னை பொருத்தமட்டில். ஸ்ரீ நேசன் ஐயாவுக்கு. செயலாளராக வர தகுதி உண்டு. அதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.
ஆனால் இன்றைய காலகட்ட தேவை ஒரு செயலாளரின் பணியையும் தாண்டி சர்வதேச ஐக்கியம். நிதி சேர்க்கை. கட்டிடம். உள்கட்டமைப்பு. இன்னும் பல விடயங்கள் உள்ளன. இவற்றிற்கு தற்போது நம் கட்சியில் உள்ளவர்களில். நிர்வாக திறன்மிக்க #குகதாசன் அவர்களுக்கு நிகர் #குகதாசன் மட்டுமே. வாக்கு வங்கியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படாமல்.
எங்கள் பலமான அரசியல் கட்டமைப்பையும் நோக்கி செயல்படுவோமாயின். பத்தோடு ஒன்றாக சிறிதரன் இருந்ததில்லை. அந்த பத்தையும் தாண்டினார் என்று வரலாறு சொல்லும்.
திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினர் இருந்தும். இல்லாமல் இருக்கிறோம் என்றோ, மட்டக்களப்பிற்கு இரண்டு தடவை செயலாளர் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் எங்களுக்கு இம்முறை செயலாரை தாருங்கள் என்று கேட்க்கும் சிறுபுத்தி கொண்ட அறிவிழிகள் அல்ல நாம்.
தகுதியானவருக்கு தகுதியை கொடு. என்ற தாரக மந்திரத்தை நம்புவோர் நாம்.. பதவி தருகிறோம் என்று கட்சி பொருளாளரை குகதாசன் அவர்ளுக்கு கொடுப்பது அவரின் திறமையை அவமதிக்கும் செயல்....
ஆயுதப் போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட இனம். இதுவரை எந்த ஒரு உலக நாடும் எமக்கு உதவாத உத்தரவு வழங்காத நிலை. 2006 லேயே எம்மை கை கழுவிய ஐநா..
நாம் யாரை நம்புவது ?
ஏனெனில்
2009 பின் சரத் பொன்சேகா , ரணில் ,மைத்திரி,சஜித் என்று எமது ஏமாற்றம் தொடர்கதையே
இனியாவது புலம்பெயர் சமூகம் தொட்டு உள்ளூர் வரை உள்ள புத்திஜீவிகளையும். ஈழ தேசிய உணர்வாளர்களையும் இணைத்து ஒரு குடையின் கீழ் செயற்படுவது காலத்தின் தேவையாகும். இவற்றுக்கு சண்முகம் குகதாசன் செயலாளராக வருவது உங்கள் செயற்பாட்டுக்கு உறுதுணையாக இக்கும் அதுவே உங்கள் முதல் நிகழ்ச்சி நிரலாகட்டும்.
இதுவே தமிழ் தேசியத்தின் வெளிப்பாடாக இன்று செயல்படும் ஸ்ரீதரின் அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது..
"நன்றி"
பொன்னம்பலம் துஷாந்தன்
ஆயுற்கால உறுப்பினர்
தமிழரசுக்கட்சி திருக்கோணமலை மாவட்டம்
25/01/2024