மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!




 உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று (30-01-2024)காலை நடைபெற்றது.


இதன் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.



அத்துடன்  மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை