இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின ஒத்திகையில் ஏற்பட்ட விபரீதம்
இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை நிகழ்வில் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 4 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று( 30-01-2024) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பராசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பராசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் விமானப்படையின் இரண்டு பெரசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பெரசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை