மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனையில் போதை பொருள் வியாபாரிகளது வீட்டை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் 3 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நேற்று(02-01-2024) இரவு விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள்
ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள்
மேலதிக விசாரணை
இதன் போது 980 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 40 மில்லிகிராம் ஹெரோயினும் 12 இலட்சத்து 22 ஆயிரத்து 300 ரூபாவும் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் கூறியுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ர பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் அம்பாறை மட்டக்களப்பு பிராந்திய கட்டளைத் தளபதி உதவிப் பொலிஸ் பணிப்பாளர் வாவிடவிதானவின் வழிகாட்டலில் வாழைச்சேனை கடதாசி ஆலை முகாம் பொறுப்பதிகாரி கே.ஜி. லக்கல்குமார தலைமையிலான விசேட அதிரடிப்படையினரின் தேடுதல் நடவடிக்கையிலே சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்வர்களையும் சான்று பொருட்களையும் விசேட அதிரடிப் படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.