மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இன்று (03-01-2024) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருதயபுரம் இரண்டாம் குறுக்கு வீதியை சேர்ந்த 47 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான கிலெனி அலோசியஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அனுமதி
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையில் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.