மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களிலும், கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சை
இன்று (04-01-2024)ஆரம்பமானது.
அண்மையில் பெய்த கனமழையால், அதீத பாதிப்புகளுகளை மட்டக்களப்பு மேற்கு வலயம் மற்றும் கல்குடா வலயங்கள் சந்தித்தன.
இப் பகுதிகளுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருந்தது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி, விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
பட்டிருப்பு,மட்டக்களப்பு,மட்டக்களப்பு மத்திய ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளிலும் பரீட்சைகள் திட்டமிட்டபடி ஆரம்பமாகின.
மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு பரீட்சைக்குச் சென்றதை அவதானிக்க முடிந்தது.