நாடளாவிய ரீதியில் விசேட டெங்குத் தடுப்பு வாரம்



நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விசேட டெங்குத் தடுப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.


தற்போதுள்ள டெங்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் டெங்குத் தடுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தலைமையில் சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது பொலிஸ் மற்றும் முப்படைகளின் தலைவர்கள், டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட மட்டத்தில் இன்று முதல் டெங்கு ஒழிப்புக் குழுக்களை ஸ்தாபிக்கவும் எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் 88,398 டெங்கு நோயாளர்கள் பதிவாகியதோடு 58 இறப்புகள் பதிவாகியுள்ளதாக டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

71 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை அதிக ஆபத்து வலயங்களாக அடையாளப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேநேரம் தற்போது அடையாளம் காணப்படும் நோயாளர்களை விட சமூகமட்டத்தில் பல நோயாளர்கள் இருக்கலாம் என்றும் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை