வேட்டையாடச் சென்ற மகனின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்தார்.
இச்சம்பவம் மாவனல்லை காட்டுப் பிரதேசமொன்றில் நேற்று முன்தினம் (28-01-2024) இரவு இடம் பெற்றுள்ளது.
தந்தையும், மகனும் காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் மகனின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியே தந்தை பலியானார். மாவனல்லை ஜயலத்கந்த பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் மகனுமே வேட்டைக்குச் சென்றுள்ளனர்.
17 வயதுடைய மகன் விலங்கொன்றுக்கு இலக்கு வைத்து சுட்ட போது, அது தவறுதலாக தந்தையை தாக்கியது.
இதில் படுகாயமுற்ற தந்தை பலியாகியுள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரது 17 வயதான மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.