சீமெந்தின் விலையும் உயர்த்தப்பட்டது!



50KG சீமெந்து பொதியொன்றின் விலையானது 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், 50KG சீமெந்து பொதியொன்றின் புதிய விலையானது 2,450 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த விலை அதிகரிப்பானது நியாயமற்றது என தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.


அத்துடன், வற் வரியானது 3%ஆல் அதிகரித்துள்ள அதேவேளை சீமெந்து பொதியின் விலை அதிகரிப்பானது வரி அதிகரிப்பு சதவீதத்தை விட அதிகாமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து, கட்டுமான உபகரணங்களின் விலையும் வருகின்ற நாட்களில் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை