இலங்கையில் சற்று முன்னர் ஐந்து பேர் சுட்டுக்கொலை




தென்னிலங்கையில் சற்று முன்னர் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று (22-01-2024)காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.


சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இன்று காலை 8.30 மற்றும் 8.40 க்கு இடையில், பச்சை நிற கெப் வண்டியில் வந்த குழுவொன்று வெள்ளை டிபென்டர் பயணித்த 5 பேரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை