யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு!
திருகோணமலை கிண்ணியா- வான் எல பொலிஸ் பிரிவில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி
முதியவரொருவர் உயிரிழந்துள்ளார்.

செம்பி மொட்டை காட்டுப் பகுதியில், மரம் வெட்டிக்கொண்டிருந்த போதே, முதியவர் யானையின் தாக்குதலுக்கு இலக்கானார்.

ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய எம்.எஸ்.முகமட் யாகூப் என்பவரே உயிரிழந்தவராவர்.
வான்-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை