மட்டக்களப்பில் மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரைச் சந்தித்தனர்
மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்குமிடையிலான
கலந்துரையாடல் இன்று(18-01-2024) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில், மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில், கலந்துரையாடல்
இடம்பெற்றது.

மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள் கொல்லப்படுகின்றமை, பண்ணையாளர்கள் பாரிய நஸ்டங்களுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகப்படுகின்றமை தொடர்பில்
தீர்வினை பெற்று தருமாறு, கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கலந்துரையாடலில் மட்டக்களப்பு, கரடியனாறு, வாழைச்சேனை, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை