அரச பஸ் சாரதி ஹெரோயினுடன் கைது!

எல்ல வீதி தடையில் நீண்ட தூர சேவை பஸ்கள் சோதனையின் போது அனுராதபுரம் டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி ஆசனத்திற்கு அருகில் ஹெரோயினுடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்ப நாய்ப் பிரிவினரும் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ்ஸை நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டு, அவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்ட போது, ​​சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள டேஷ்போர்டில், சுற்றப்பட்ட பார்சல் ஒன்று காணப்பட்டது.

இதனையடுத்து அதனைச் சோதனையிட்ட போது ஹெரோயின் போன்ற 273 பொதிகள் வெள்ளை பொலிதினில் சுற்றப்பட்டிருந்ததைக் கண்டு பொலிசார் அதனை எடைபோட்ட போது அதில் 143 கிராம் எடை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி பஸ்ஸின் சாரதியாக இருந்த ராஜாங்கனையை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதியது பழையவை