தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு - வாழ்த்து தெரிவித்த பிள்ளையான்




தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் அவர் இந்த வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.


புதிய பாதையில் பயணிக்க வேண்டும்
அந்த பதிவில், நீண்ட நெடிய அரசியல் வரலாற்றினை கொண்ட எம் சமூகத்தின் பழம்பெரும் கட்சி ஒன்றுக்கு தலைமை ஏற்றிருக்கும் தங்கள் பயணம், வெற்றுக்கோச சித்தாந்த அரசியலுக்கப்பால் தமிழ் மக்களின் நிலம், நிர்வாகம், உரிமை மற்றும் இருப்பு சார்ந்து வெற்றியடைய வேண்டும் என விரும்புகின்றேன்.


மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் அடிமட்ட சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தங்கள் வரலாற்றுப் பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் நேற்று (21-01-2024) திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புதியது பழையவை