ரணில் விக்ரமசிங்கவின் வருகையை எதிர்த்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஒக்டோபர் மாதம் மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது, எதிர்ப்ப ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்கள் மீது, ஏறாவூர் பொலிஸாரால்
தொடுக்கப்பட்ட வழக்கு மார்ச் மாதம் 4ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாந்துறை பகுதியில் மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி பாரிய ஆர்ப்பாட்டம்
மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் – பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை இன்று (24-01-2024)ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி செல்வி.தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையானது எதிர்வரும் மார்ச் மாதம் 04 ம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைக்கு தீர்வு கோரி சித்தாண்டியில் இடம்பெறும் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 06 பேர் மீதான வழக்கும்
மார்ச் மாதம் 4ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை