மட்டக்களப்பு-உன்னிச்சை பிரதான வீதியில், சுமைதாங்கி பிரதேசம் நீரில் மூழ்கியது!
மட்டக்களப்பு நகரிலிருந்து உன்னிச்சை பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான வீதியில், விமான நிலையத்திற்கு அருகேயுள்ள சுமைதாங்கி வீதியின் குறுக்கே, ஆற்று நீர் ஊடறுத்துப்
பாய்வதால், அவ் வீதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, பொருட்களைக் கொள்வனவு செய்ய மட்டக்களப்பு நகரிற்கு வருகை தரும், ஆயித்தியமலை,உன்னிச்சை,வவுணதீவு,புதூர், வீச்சுக்கல்முனை, திமிலை தீவு, சேத்துக்குடா,வலையிறவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இவ் வீதியூடாக பயணிப்பதை
அவதானிக்க முடிகிறது.

ஒவ்வொரு மழை காலங்களிலும் வெள்ள அனர்த்தத்தால் இவ் வீதி மூழ்குவதாக குறிப்பிடும் பயணிகள், இதனைக் கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு
கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை