சமூக வலைத்தளங்களில் கசிந்த உயர்தரப் பரீட்சை வினாத்தாள்
இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


பரீட்சைகள் ஆணையாளர் தகவல்
இந்த ஆண்டு உயர்நிலைத் தேர்வின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாள் தொடர்பான தேர்வு கடந்த 10ஆம் திகதி நடந்திருந்தது.


எவ்வாறாயினும், குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்பட்டதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது உண்மைகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை