கொக்கட்டிச்சோலை நினைவேந்தல் விவகார வழக்கு ஒத்திவைப்பு!
2022ம் ஆண்டு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை நினைவேந்தலை அனுஸ்டித்தமை தொடர்பில், கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (31-01-2024) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உட்பட
சிலருக்கு எதிராகவே இவ் வழக்குத் தொடுக்கப்பட்டது.

விசாரணைகளுக்குப் பின்னர் வழக்கு எதிர்வரும் மே மாதம் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை